தமிழகம் இந்தியா சினிமா

கள்ளக்காதல்.. கருக்கலைப்பு..!! சமந்தாவின் விவாகரத்து காரணம் இதுவா?? நடிகை சமந்தா என்ன கூறியுள்ளார் பாருங்க..

Summary:

கள்ளக்காதல்.. கருக்கலைப்பு..!! சமந்தாவின் விவாகரத்து காரணம் இதுவா?? நடிகை சமந்தா என்ன கூறியுள்ளார் பாருங்க..

கள்ளக்காதல், கருக்கலைப்பு போன்ற காரணங்களால் சமந்தா விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து அதற்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒருவர் சமந்தா - நாகசைதன்யா ஜோடி. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

குறிப்பாக, சமந்தா கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும், அவர் கருக்கலைப்பு செய்ததாலும்தான் விவாகரத்து வரை சென்றதாக கூறப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள சமந்தா, "எனது சொந்த பிரச்சினையில் நீங்கள் காட்டிய உணர்வுகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என் மீது வைக்கப்பட்ட பொய்யான வதந்தி மற்றும் கதைகளுக்கு எதிராக நீங்கள் காட்டிய அனுதாபத்திற்கு மிகவும் நன்றி.

முதலில் வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றார்கள். தற்போது நான் கருக்கலைப்பு செய்ததாக கூறுகின்றனர்.

இப்படி அடுக்கடுக்கான புகார்களை என்மீது வீசுகிறார்கள். உண்மையில் விவாகரத்து என்பது பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்த கடினமான நேரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். இடைவெளி இல்லாமல் என்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தகவல் எதுவும் உண்மை இல்லை" என சமந்தா தெரிவித்துள்ளார்.


Advertisement