சினிமா

அடக்கொடுமையே..யாராவது இப்படி செய்வாங்களா? 2 பிள்ளைகளை வைத்துக்கொண்டு மனைவிக்கு வந்த மோசமான ஆசை! கணவர் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

Summary:

பீகார் சுல்தான்கஞ்ச்  நகரை சேர்ந்தவர் உத்தம் மண்டல். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ககாரியா

பீகார் சுல்தான்கஞ்ச்  நகரை சேர்ந்தவர் உத்தம் மண்டல். இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த சப்னா குமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சப்னாவிற்கு அதே பகுதியில் வசித்து வந்த, தன்னை விட வயது குறைந்த ராஜு குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் உத்தமுக்கு தெரியவந்த நிலையில், அதிர்ச்சியடைந்த அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் சப்னாவின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு எவ்வளவோ எடுத்துக் கூறினர். ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் சப்னா அவரது காதலை தொடர்ந்தார்.

இந்த நிலையில் கணவர் உத்தம் மனைவி சப்னாவின் ஆசைப்படி அவரது காதலனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். பின்னர் அருகில் இருந்த துர்க்கை கோவில் ஒன்றில் திருமண ஏற்பாடுகள் செய்யபட்டு உத்தம் மற்றும் சப்னாவின் குடும்பத்தினர் முன்னிலையில் சப்னாவின் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் உத்தம் திருமண ஜோடி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சப்னா  குழந்தைகள் தன்னுடன் இருக்க மறுத்தநிலையில் உத்தமே இருவரையும் அழைத்து சென்றுவிட்டார். இந்த செய்தி அப்பகுதியில் பரவிய நிலையில் பலரும் வியந்து போயுள்ளனர்.


Advertisement