சினிமா

டிரைலரே சும்மா களைக்கட்டுதே! வெளியானது ஹிப்ஹாப் ஆதியின் கலகலப்பான 'நான் சிரித்தால்' ட்ரைலர்!

Summary:

hiphop aathi nan sirithal trailer released

இன்றைய தலைமுறையினரின் விரும்பதக்க இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இசையமைக்கும் படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட். அவரது பாடல்கள் அனைத்திற்கும் பெரும் ரசிகர்பட்டாளமே உள்ளனர்.

இந்நிலையில் நடிகராக களமிறங்கிய ஹிப்ஹாப் ஆதி நடித்த முதல் படம் மீசைய முறுக்கு அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் நடித்த நட்பே துணை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்த இரண்டு ஹிட் படங்களையும் சுந்தர்.சி தான் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆதி இயக்குனர் சுந்தர்சி தயாரிப்பில் மூன்றாவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஷங்கரின் உதவி இயக்குனரான ராணா இயக்கியுள்ளார். நான் சிரித்தால் என பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தில் கேஎஸ் ரவிக்குமார் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் பாண்டியராஜன், ஐஸ்வர்யா மேனன், முனீஸ்வரன் ரவி, மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் கலகலப்பான ட்ரைலர் தற்போது  வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement