சினிமா

தினமும் அடிச்சு கொடுமைப்படுத்துறார்!! என்னால தாங்கமுடியலை.. கதறியபடி தந்தை மீது புகாரளித்த பிரபல நடிகை!

Summary:

Hindi serial actress complaint on his father

ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் குங்கும் பாக்யா என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை த்ருப்தி ஷன்கதர். இவர்  தெலுங்கில் ஓய் இடியட் என்ற ஒரு படத்திலும் நடித்துள்ளார். 19 வயது நிறைந்த இவர் தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாயுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தந்தை மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்து வருகிறார்.

 இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் த்ருப்தி, எனது தந்தை, 19 வயது நிறைந்த எனக்கு 29 வயது நிறைந்த இளைஞர் ஒருவருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றார். மேலும் இதற்கு நான் சம்மதம் தெரிவிக்காததால் என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்கிறார். 

முடியைப் பிடித்து அடித்து மிகவும் கொடுமைப்படுத்துகிறார். என்னை கொன்று விடுவேன் எனவும் மிரட்டுகிறார். என்னால் தாங்கமுடியவில்லை. என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து த்ருப்தியின் தந்தையை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement