இந்தியா சினிமா

சமீபத்தில் திருமணம்! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் நடிகர்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

hindi serial actress commit suicide

ஹிந்தி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மன்மீத் கிரிவால். இவருக்கு சமீபத்தில்தான் ரவீந்திரா கவுர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து படப்பிடிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனால் நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், மன்மீத் கடன் பிரச்சினையால் பெருமளவில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் இரவில் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து படுக்கையறைக்கு சென்ற அவர் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

TV actor Manmeet Grewal commits suicide; he was in depression due to debts

இந்நிலையில் நாற்காலி கீழே விழும் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடிவந்த மன்மீத்தின் மனைவி அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மன்மீத் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது  மன்மீத்  மனைவி கூறுகையில், எனது கணவருக்கு சில இடங்களில் இருந்து வரவேண்டிய பணம் வரவில்லை. மேலும் அவருக்கு படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் ஏராளமான கடன் பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில்  அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். மேலும் அதனாலேயே அவர் இப்படி ஒரு விபரீத முடிவையும் எடுத்துள்ளார் என கதறி அழுதுள்ளார்.


Advertisement