தூம், தூம் 2 படத்தின் இயக்குனர் மாரடைப்பால் காலமானார்; சோகத்தில் திரையுலகினர்.!

தூம், தூம் 2 படத்தின் இயக்குனர் மாரடைப்பால் காலமானார்; சோகத்தில் திரையுலகினர்.!


Hindi Director Dhoom & Dhoom 2 Sanjay Passed Away 

 

ஹிந்தி திரையுலகில் தூம், தூம் 2 திரைப்படங்கள் ஆக்சன் காட்சிகள் கொண்ட மறக்க முடியாத திரைப்படங்கள் ஆகும். இப்படத்தை இயக்கியிருந்தவர் சஞ்சய் காத்வி (வயது 56).

இயக்கம் தவிர்த்து, ஹிந்தி திரையுலகில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகிஸ்தராக இருக்கும் யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் இவர்தான். 

மும்பை லோக்வாண்டா பகுதியில் இருக்கும் தனது குடியிருப்பில் திடீரென சரிந்து விழுந்த சஞ்சயை மீட்ட குடும்பத்தினர், அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். 

ஆனால், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவரின் மறைவு ஹிந்தி திரையுலகுக்கு பெரும் இழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.