பிக்பாஸ் வீட்டிற்குள் திடீர் கலவரம்; பெண் போட்டியாளரை பளார் விட கை ஓங்கியதால் பரபரப்பு.!hindi-bigg-boss-season-17-contestant-vikki-try-to-slap

 

ஹிந்தி பிக்பாஸ் தற்போது 17-வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 28 ஜனவரி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து இதுவரை 73 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டியாளர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போதைய நிலவரப்படி வீட்டில் அபிஷேக், அங்கீதா, அனுராக், ஆரா, அருள், ஆயிஷா, ஈஷா, மன்னாரா, முனாவர், நைல், ரிங்கு, சமர்த், விக்கி ஆகியோர் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இவர்களில் அங்கீதா லோகாண்டா மற்றும் விக்கி ஜெயின் ஆகியோர் கணவன் - மனைவி ஆவார்கள். பிக்பாஸ் இல்லத்திற்குள் தம்பதிகள் ஜோடியாக வெற்றிக்கு முயற்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தற்போது விக்கி தனது மனைவியை படுக்கையில் இருந்தபோது கைநீட்டி அடிக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை சந்தித்துள்ளன. 

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருப்பினும், தொடர் விவாதத்தை ஹிந்தி ரசிகர்களிடையே இது ஏற்படுத்தி இருக்கிறது.