200, 300 ரூபாயாவது கொடுத்து உதவுங்கள்! வறுமையில் வாடும் பிரபல நடிகர்! உருக்கமாக வெளியிட்ட வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

200, 300 ரூபாயாவது கொடுத்து உதவுங்கள்! வறுமையில் வாடும் பிரபல நடிகர்! உருக்கமாக வெளியிட்ட வீடியோ!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய ஊரடங்கால் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் துணை நடிகர்கள் பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் வருமானமின்றி சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் பெருமளவில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹிந்தியில் பெகுசராய் என்ற தொடரில் நடித்து வருபவர் ராஜேஷ் கரீர். இவர் மங்கள் பாண்டே, அக்னிபத் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால்  வறுமையில் வாடும் அவர் நிதியுதவி கேட்டு மிகவும் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் ராஜேஷ் கரீர். நான் நடிகனாக உள்ளேன். மக்களுக்கு என்னை அடையாளம் தெரியும் என நம்புகிறேன். நான் உதவி தேவைப்படும் நிலையில்  இருக்கிறேன். இப்போது நான் வெட்கப்பட்டால் என் வாழ்க்கை ரொம்ப மோசமாகிவிடும். எனக்கு பணஉதவி தேவைப்படுகிறது. என் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன்.  200, 300 ரூபாயாவது எனக்குத் தந்து உதவுங்கள் என தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன். 

படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என எனக்குத் தெரியாது. மேலும் எனக்கு வேலை கிடைக்குமா என்றும் தெரியவில்லை. என் வாழ்க்கை ஸ்தம்பித்துபோயுள்ளது.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். 
நான் பஞ்சாபுக்கே திரும்பிச் சென்று ஏதாவது வியாபாரம் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து உங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது செல்போன் எண், வங்கி கணக்கு விபரங்களையும் அவர் அளித்துள்ளார். இந்த வீடியோ வைரலானநிலையில் பலரும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo