
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இரு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன், காவியா என பல பிரபலங்களும் அனைவரையும் கவரும் வகையில் அசத்தலாக நடித்து வருகின்றனர். இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் இத்தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹேமா அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடியப்போவதாக செய்தி பரவுகிறது. அது உண்மையா என்று கேட்டுள்ளார் அதற்கு அவர், பாண்டியன் ஸ்டோர் டீம் அப்படி எதுவும் சொல்லவில்லை. அதனால் இல்லை எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement