சினிமா

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு.! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!

Summary:

நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது என தெரிவித்தார்.

இந்தநிலையில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நடிகர் விவேக்குக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 

திரைத்துறை மட்டுமின்றி மரம் நடுதல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் கண்டிப்பாக அனைவரும் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


Advertisement