மீண்டும் பிரபல இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் குற்றசாட்டு...! அதிர்ச்சி தகவல்...!

he-askes-a-girl-daily-sri-reddy-shocks-again


he-askes-a-girl-daily-sri-reddy-shocks-again

 

மீண்டும் பிரபல இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் குற்றசாட்டு...! அதிர்ச்சி தகவல்...!

சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி சினிமா துறையில் உள்ள முக்கிய பிரபலங்களை குறி வைத்து அவர்கள் மீது பாலியல் சர்ச்சையை கூறி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு பட இயக்குனர் ராம்கி மீது குற்றம்சாட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சையான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இயக்குனர் ராம்கி என்னுடை ஆபாசமாக பேசியதாகவும் அதனை நான் ரெகார்ட் செய்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வாட்ஸப்பில் அதன் சாட்சிகளை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் இதனை எனக்கு எஸ்.எம் என்பவர் தான் அனுப்பினார் என்றும் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். 

இதற்கிடையில் இந்த சர்ச்சையை தொடர்ந்து இன்னும் நிறைய குற்றசாட்டுகள் சர்ச்சைகள் இருப்பதாகவும் மறைமுகமாக தெரிவித்துள்ளார். 
தெலுங்கு இயக்குனர் ராம்கி பற்றிய புகாரை தெலுங்கில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீரெட்டி, பாலியல் தேவைக்கு இளம் பெண்களை இயக்குனர் ராம்கி கேட்டதாகவும், அவரை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.  இயக்குனர் ராம்கி பல பேட்டிகளில்  பிரபலங்கள் மீது தொடர்ந்து சர்ச்சையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ஸ்ரீரெட்டியை விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.