"குமரேசன் ரெடி..." விடுதலை 2 இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் ஆரம்பமானதா?... இன்ஸ்டாவில் சூரியின் அசத்தலான அப்டேட் வீடியோ!has-the-shooting-of-the-final-part-of-viduthalai-2-star

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் விடுதலை இதன் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்  அதிகரித்திருந்தது.

ஜெயமோகன் எழுதிய ஒரு சிறுகதையை மையமாக வைத்து விடுதலை திரைப்படத்தை  இயக்கியிருந்தார் வெற்றிமாறன். இதன் முதல் பாகத்தில் சூரி விஜய் சேதுபதி  கௌதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மார்ச் மாதம் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Kollywoodஇதனைத் தொடர்ந்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடமிருந்து வருகிறது. இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின்  இரண்டாம் பாகத்தில் ஒரு சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்னும் மீதம் இருப்பதாக படத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. தற்போது அதற்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருக்கிறது.

நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  குமரேசன் கதாபாத்திரத்திற்காக தயாராகி செல்லும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம்  பாகத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்புகள் தயாராகிவிட்டது என  சினிமா ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.