அந்த நடிகையோட நித்தியானந்தாவின் கைலாஷா நாட்டுக்கு போக ஆசை..! ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட தகவல்..! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

அந்த நடிகையோட நித்தியானந்தாவின் கைலாஷா நாட்டுக்கு போக ஆசை..! ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட தகவல்..!

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பொறியாளன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்துள்ள இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். பெண்களின் ஜாக்லெட் பாய்யாக வளம் வரும் இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாணிடம் விளையாட்டாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது, நித்யானந்தாவின் கைலாஸா நாட்டில் ஒரு நடிகையுடன் தாங்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் எந்த நடிகையுடன் அங்கு செல்விர்கள் என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த ஹரிஷ், வாய்ப்பு கிடைத்தால் நடிகை ரஷ்மிக்கா மந்தனாவுடன் கைலாஷா நாட்டிற்கு செல்வேன் என பதிலளித்தார்.

ஏன் அவரை தேர்வு செய்திர்கள் என கேட்டதற்கு, அவர் மிகவும் ஜாலியானவர், எனவே அவருடன் சென்றால் நன்றாக இருக்கும் என பதிலளித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo