#HBD AR RAHMAN: இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள்..! குவியும் வாழ்த்துகள்..!!



Happy birthday AR Rahman

 

தமிழ் திரையுலகில் இளையராஜாவுடன் இசைபயணத்தை தொடங்கி பின் நாட்களில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிய பெருமை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையே சாரும். இசையை நேசிக்கும் தந்தைக்கு மகனாகப் பிறந்த ஏ.எஸ்.திலீப்குமார் தனது 20 வயதில் இஸ்லாமிய மதத்தை மனப்பூர்வமாக தேர்ந்தெடுத்து, தனது பெயரை ஏ.ஆர்.ரகுமான் என்றும் மாற்றிக்கொண்டார். 

சிறுவயதிலிருந்து பல கஷ்டங்களைக் கடந்து வாழ்க்கையில் படிப்படியாக மேலே வந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு இசைஞானி அடைக்கலம் கொடுத்தது பேருதவியாக இருந்தது. இன்று தமிழக அளவிலும், இந்திய அளவிலும் இசையில் மிகப்பெரிய நாயகனாக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் இருக்கிறார். 

HBD AR RAHMAN

இந்திய துறைகளில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ள ஏ.ஆர். ரகுமான் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல விருதுகளை வென்று இருக்கிறார்.

மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தனது இசையால் நம்மை கட்டிப்போட்டு எப்போதும் நம்மை துள்ளல் உற்சாகத்துடன் வைத்திருக்கும் இளைஞர்களின் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு திரையுலகினர் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.