சினிமா

முதலில் குழந்தைகள்! அப்பறம்தான் திருமணம்! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உண்மையைப் போட்டுடைத்த ஹன்சிகா!

Summary:

Hansika talk about her marriage

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி.  ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமான இவர் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்த இவர் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக முன்னேறினார். இந்நிலையில் கடந்த சில படங்களில் உடல்எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடற்யிற்சி மூலம் உடல் எடையை குறைத்துள்ளார்.

நடிகை ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டபோது அவர், மும்பை புறநகர் பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றை கட்டி வருகின்றேன். அதற்கு பணம் தயார் செய்யவே பாதி நேரம் போய்விடுகிறது.

மேலும் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வரும் நானும் ஒரு குழந்தைதான். குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், குடும்பத்தைப் பார்த்துக்கணும். அதன்பின் தான் திருமணம் என்று கூறியுள்ளார்.


Advertisement