அடேங்கப்பா.. இவ்வளவா! லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுதே! நடிகை ஹன்சிகாவிற்கு அடித்த ஜாக்பாட்டை பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. இவ்வளவா! லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுதே! நடிகை ஹன்சிகாவிற்கு அடித்த ஜாக்பாட்டை பார்த்தீங்களா!!



hansika-have-9-movie-projects

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. கொழு கொழுவென செம க்யூட்டாக இருந்த நடிகை ஹன்சிகாவிற்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. மேலும் அவரை பலரும் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைத்து வந்தனர்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல்வேறு மொழி படங்களிலும் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். பின்னர் ஹன்சிகா தனது உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார். இந்த நிலையில் அவருக்கு படவாய்ப்புகள் பெருமளவில் குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து ஹன்சிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுவந்தார்.

Hansika

இந்த நிலையில் தற்போது ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. அவரது கைவசம் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, 105 நிமிடங்கள், மகா போன்ற படங்கள் உள்ளன. மேலும் விஜய் சந்தர் இயக்கத்திலும், சேட்டை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க
அவர் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படங்கள் வெளியானால் ஹன்சிகா மீண்டும் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.