சினிமா

100% Love படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு...! ரசிகர்கள் உற்சாகம்...!

Summary:

gvp-next-film-single-track-release-date

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 100%love. இந்த படந்தை இயக்குனர் சுகுமார் இயக்கினார். 

மேலும் இந்த படத்தை தமிழில் இயக்குனர் சுமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஷாலினி பாண்டே ஹீரோ – ஹீரோயினாக நடிக்கின்றனர்.இப்படத்தை சந்திரமௌலி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார். இதற்கிடையில் இதன் ஒரே ஒரு சிங்கிள் ட்ராக் மட்டும் அக்டோபர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு சூரியன் எஃப் எம்மில் வெளியிட முடிவு செய்து உள்ளனர். 

தெலுங்கில் இந்த படம் மாபெரும் ஹிட் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி தான் இந்த படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 


Advertisement