சினிமா

பெரும் எதிர்பார்ப்புகிடையே அந்த படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்! செம குஷியில் சூர்யா ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா சூரரை போற்று படத்தின் வெற்றியை பாண்டியராஜ் இயக்கத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா சூரரை போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். மேலும் அதனை தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். ஆனால் வெற்றிமாறன் தற்போது சூரியை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். 

அதன் படப்பிடிப்பு முடிந்த பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறதாம். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றும் ஜிவி பிரகாஷ் புதிய அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், இன்று முதல் வாடிவாசல் படத்திற்கான இசைப் பணிகளை துவங்குகிறேன் என்று  அறிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement