சினிமா

எம்புட்டு அழகு..! முதல் முறையாக வெளியான நடிகர் ஜி.வி பிரகாஷின் குழந்தையின் புகைப்படம்.!

Summary:

GV Prakash daughter photo goes viral

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்து தற்போது பிரபல நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் நடிகர் ஜி.வி பிரகாஷ். 

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் பிரபல பாடகி சைந்தவி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் அண்மையில் தான் இந்த தம்பதிக்கு அன்வி என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இவர்களுக்கு குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை குழந்தையின் புகைப்படம் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் நேற்று  காலை ஜிவி பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, முதல் ஃபேமிலி போட்டோ என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

முதல் முறையாக இணையத்தில் வெளியான நடிகர் ஜிவி பிரகாஷின் குழந்தை புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement