அட! ஜி.வி பிரகாஷுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா! வெளியான தகவலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

Gv prakash act in hollywood movie

திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி ஏராளமான ரசிகர்களை பெற்று பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஜி. வி பிரகாஷ். அதனைத்தொடர்ந்து டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய அவர்  அதனைத் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார், சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது அவரது கைவசம் ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, பேச்சுலர் என  பல படங்கள் உள்ளது. அதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார்.

கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து உருவாகும்  டிராப் சிட்டி திரைப்படத்தில் ஜி. வி பிரசாத் மருத்துவராக நடிக்கிறார். மேலும் அப்படத்தில் நடிகர் நெப்போலியன், ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காட்டும் திரைப்படமாக இப்படம் அமையவுள்ளது. மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, ஒரு சாதாரண மனிதனாகப் போராடும் ராப்பரின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. 


Advertisement