திரையுலகமே சோகம்.. "இளையநிலா பொழிகிறதே" பாடலுக்கு கிட்டார் வாசித்த லெஜெண்ட் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் காலமானார்..!!
கோலிவுட் சினிமாவில் "பயணங்கள் முடிவதில்லை" படத்தில் வரும் "இளையநிலா பொழிகிறதே" பாடலுக்கு இசை அமைத்தவர் கிட்டாரிஸ்ட் ஆர்.சந்திரசேகர் (வயது 79). இவர் இளையராஜாவின் பல பாடல்களுக்கு கிட்டார் வாசித்துள்ளார்.
மேலும் இவர் டி.ராஜேந்திரன் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் பிரபல இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ் திவாகர் உள்ளிட்டருடனும் இணைந்து கிட்டாரிஸ்டாக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் முதல் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றர்.