"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
"இனி நடிக்கப் போவதில்லை!" கெளதம் மேனன் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..
இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் கெளதம் மேனன். இவர் 2001ம் ஆண்டு "மின்னலே" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, காக்க காக்க உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இவரது வாரணம் ஆயிரம் படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. மேலும் இவரது தயாரிப்பில் 2013ம் ஆண்டு வெளியான "தங்கமீன்கள்" திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் காக்க காக்க, என்னை அறிந்தால், ஓ மை கடவுளே, டிரான்ஸ் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்டு பேசிய கெளதம் மேனன், " நான் ரொம்பவே இயல்பான கேரக்டர்.
நான் நினைப்பதை அப்படியே வெளிப்படையாக பேசக்கூடிய ஆள். நான் நடித்த படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுத்தால் அதில் நடிப்பேன். இனி புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை. இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறேன்" என்று கூறியுள்ளார்.