லியோ படப்பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட இயக்குனர் கெளதம் மேனன்.! வைரலாகும் வீடியோ.!



Gowtham menon dance for leo song

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "லியோ". இன்று இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. லோகேஷின் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் முறையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது.

Leo

விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் பாடலான "நா ரெடி வரவா" பாடல் விஜயின் பிறந்தநாளன்று வெளியானது.

விஷ்ணு எடவன் எழுதிய இந்த பாடலை விஜய் மற்றும் அசல் கோலார் பாடியுள்ளனர். இணையத்தில் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்று சாதனை படைத்தது இந்தப் பாடல். தினேஷ் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு கோரியோக்ராப் செய்துள்ளார்.

Leo

2000 நடனக்கலைஞர்களுடன் மொத்தம் 7நாட்கள் இப்பாடல் படமாக்கப்பட்டதாம். பலரும் இந்தப்பாடலுக்கு ஆடி வைப் செய்து வரும் நிலையில், இப்படத்தில் நடித்துள்ள கெளதம் மேனனும் இப்போது இப்பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.