சினிமா

போலீஸ் ஸ்டேஷனே வனிதாவ பார்த்தா பயப்புடுது.! உன்னை அழிக்க நான் இருக்கேன்டி..! வனிதாவை கிழித்தெடுத்த பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Summary:

Girl angry speech against to vanitha 3rd marriage video goes viral

சமீப காலமாக தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம். ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து வயதுக்கு வந்த குழந்தைகள் இருக்கும் நிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், சர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

போதாத குறைக்கு வனிதாவின் மூன்றாவது கணவரின் முதல் மனைவி தனது கணவன் தனக்கு விவாகரத்து கொடுக்காமலையே வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை  அடுத்து வனிதாவுக்கு எதிராக சொல்வதெல்லாம் உண்மை புகழ் லெட்சுமி ராமகிருஷ்ணன் தொடங்கி பலரும் விமர்சித்துப் பேசினார்கள்.

இவர்களின் விமர்சன பேச்சுக்கு வனிதா பதில் வீடியோ வெளியிட்டதை அடுத்து பெரும்பாலான விஜபிக்கள் மன்னிப்பு கேட்டும்விட்டனர். இந்நிலையில் யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி என்பவர் வனிதாவை சும்மா கிழித்து தொங்க விட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், வனிதா வருசத்துக்கு ஒரு கல்யாணம் செய்வா. வடபழனி போலிஷ் ஷ்டேசன்லயே வனிதாவை பார்த்து பயப்படுறாங்க என கூறியுள்ளார்.

மேலும், என்னோட யூ டியூப் சேனலில் வனிதாவை பத்தி நான் இனி போட்டுட்டு தான் இருப்பேன், உன்னை அழிக்க நானொருத்தி இருக்கேன்டி என வனிதாவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் அந்த வீடியோவில் பேசியுள்ளார் அந்த பெண். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement