சினிமா

தளபதி விஜயின் இந்த வழக்கமான செயலால் குவியும் பாராட்டுகள் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

விஜய் gifted for gold ring to bikil team

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.  படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்த நிலையில், இன்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு தங்க மோதிரத்தை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார். அம்மோதிரத்தில் பிகில் என்ற எழுத்து ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று இதற்கு முன்பு பைரவா படத்திற்காக படக்குழுவினருக்கு தங்க சங்கிலி பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement