இதையெல்லாமா கிப்ட்டாக தருவாங்க! சூப்பர் சிங்கர் புகழ் திவாகரின் திருமணத்திற்கு பிரபலங்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்



Gift thivakar marriage

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியானது ஜீனியர், சீனியர் என மாறி மாறி நடத்து வருகிறது. இவரை இந்த நிகழ்ச்சியில் 7 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் 4யில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் தான் திவாகர். இவர் சாதாரண ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று முதல் பரிசையும், அழகான வீட்டையும் தட்டி சென்றார்.

Thivakar

அதன் பிறகு இவரது வாழ்க்கை வேற லெவலுக்கு முன்னேறியது. அதன் பிறகு பல படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் இவரது திருமணம் நேற்று சென்னையில் உள்ள மாதவரம் தேவாலயத்தில் நடைப்பெற்றது.

அந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாடகர் திவாகருக்கு வெங்காய கூடையையும், கலக்கப்போவது யாரு பிரபலங்கள் கொசு பேட்டையும் பரிசாக கொடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.