சினிமா

எல்லாம் அவருக்காகவா! உடைஞ்ச கையோடு ஜெனிலியா செய்த காரியத்தை பார்த்தீர்களா! வீடியோ இதோ!!

Summary:

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜென

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் நடிப்பில் உத்தமபுத்திரன் என தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

ஜெனிலியா பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர். ஆனாலும் எப்பொழுதும் குறும்புத்தனமான இருக்கும் ஜெனிலியா அண்மையில் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டபோது தவறி கீழே விழுந்து கையை உடைத்து கொண்டார். இதுகுறித்து அவர் அண்மையில் வீடியோவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது உடைந்த கையுடன் இருக்கும் அவர் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் இது உங்களுக்காக விஜய். உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம் என குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 


Advertisement