ஐயயோ.. என்னாச்சு! கையில் கட்டுடன் நடிகை ஜெனிலியா! வீடியோவை கண்டு பதறிப்போன ரசிகர்கள்!!

ஐயயோ.. என்னாச்சு! கையில் கட்டுடன் நடிகை ஜெனிலியா! வீடியோவை கண்டு பதறிப்போன ரசிகர்கள்!!


genelia slip while practising skating

தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் என தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அவர் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் ஜெனிலியா பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர். ஜெனிலியா இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘Its My life ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் நடிகை ஜெனிலியாவுக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது குழந்தைகளுக்கு கம்பெனி கொடுப்பதற்காக ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டபோது தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு கை எலும்பு முறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கையில் கட்டுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ஜெனிலியா நான் வெற்றி பெறும் வரை முயற்சி செய்வேன் என்று உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.