
சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜெனிலியா 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க உள்ளார்.
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. அதைத் தொடர்ந்து அவர் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் துறுதுறுவென இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை ஜெனிலியா தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இந்த நிலையில் அவர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர்.
அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட நடிகை ஜெனிலியா தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணத்துக்கு பிறகு கணவருடன் நேரத்தை செலவிட முடிவு செய்து அப்படியே செயல்பட்டேன். பிறகு குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. வீட்டில் குழந்தைகள் என்ன செய்வார்களோ என்று கவலைப்பட்டுக் கொண்டு என்னால் ஷூட்டிங்கில் கவனம் செலுத்த முடியாது.
அதனால் கிடைத்த பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டேன். தற்போது குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்துவிட்டனர். அதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். பட வாய்ப்புகளும் அதிகமாக வருகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறேன். அதனால் கண்டிப்பாக நான் நடிக்கும் கேரக்டர் மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும். மேலும் அம்மாவாக நடிக்கமாட்டேன். என் வயது கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன் அப்படியெல்லாம் எந்த எண்ணமும் கிடையாது என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement