சிகிச்சையை விட அதுதான் கொடுமை! கொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகை ஜெனிலியா! வெளியான ஷாக் தகவல்!

சிகிச்சையை விட அதுதான் கொடுமை! கொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகை ஜெனிலியா! வெளியான ஷாக் தகவல்!


genelia-affected-by-corono

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் பல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர்  தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பல படங்களில்  நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெனிலியா ஹிந்தி நடிகரான  ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஜெனிலியா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

genelia

அதில் எனக்கு  மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. அதனை தொடர்ந்து நான் 21 நாட்கள் என்னை தனிமைப்படுத்திகொண்டேன். தற்போது கடவுளின் அருளால் சிகிச்சைக்கு பிறகு நோயில் இருந்து மீண்டுள்ளேன்.

கொரோனாவுக்கு எதிரான எனது இந்த போராட்டம் மிக எளிமையானதாக இருந்தது. ஆனாலும் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டது பெரும் சவாலாக இருந்தது. மீண்டும் எனது குடும்பத்தினருடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி என கூறியுள்ளார்.