அடேங்கப்பா.. செம ஜாக்பாட்தான்! விஜய் டிவியில் ஹீரோயினாகும் பிக்பாஸ் கேபி! அதுவும் எந்த தொடரில் தெரியுமா?

அடேங்கப்பா.. செம ஜாக்பாட்தான்! விஜய் டிவியில் ஹீரோயினாகும் பிக்பாஸ் கேபி! அதுவும் எந்த தொடரில் தெரியுமா?


gaprilla-going-to-act-in-eeramana-rojave-season-2

விஜய் தொலைக்காட்சியில் சிறுவயதிலேயே நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானார். 

பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிய அவர் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் சமூக வலைதளங்களில் பிசியாக இருந்த அவர் தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

vijay tv

இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற தொடர் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இத்தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த பவித்ரா தற்போது விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாவது பாகம் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அதில் ஹீரோயினாக பிக்பாஸ் கேப்ரில்லா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.