சினிமா

ப்பா.. என்னா ஒரு அதிரடி.! மரணமாஸ் காட்டும் ஹர்பஜன் சிங்.! வேற லெவல் டீசர்.!

Summary:

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் அதிரடியாக வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் நகைச்சுவை கேரக்டரில் சதீஷ், குக் வித் கோமாளி பாலா மற்றும் வில்லனாக பிரபல நடிகர் அர்ஜுனும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் அதிரடியாக வெளியாகி உள்ளது. செம ஸ்டைலிஷான லாஸ்லியா, சீரியஸான ஹர்பஜன் சிங், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அர்ஜுன். மற்றும் ஹர்பஜன் சிங் ஆடிப்பாடி சண்டையிட்டு டீசரில் மாஸ் காட்டியுள்ளார்.


Advertisement