பிக்பாஸ் லாஸ்லியா, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் அசத்தலான நடிப்பில் உருவான பிரெண்ட்ஷிப்! இணையத்தை கலக்கும் பட டீசர் இதோ ! - TamilSpark
TamilSpark Logo
சினிமா வீடியோ

பிக்பாஸ் லாஸ்லியா, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் அசத்தலான நடிப்பில் உருவான பிரெண்ட்ஷிப்! இணையத்தை கலக்கும் பட டீசர் இதோ !

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன்  மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு என ஆரம்பத்தில் பெரும் ஆர்மி  உருவானது. இந்நிலையில் தற்போது லாஸ்லியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

 மேலும் லாஸ்லியா  தற்போது முதன் முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து friendship என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு நண்பராக சதீஷ் நடித்துள்ளார்.மேலும் அவர்களுடன் மிரட்டலான கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார்.

ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா இயக்கும் இத்திரைப்படத்தை ஜெ.பி.ஆர் மற்றும் ஸ்டாலின் தயாரித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் கிரிக்கெட் வீரராகவே நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று சர்வதேச உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo