சினிமா

பாவாடை தாவணியில் லாஸ்லியா, வேட்டி சட்டையில் ஹர்பஜன் சிங்! இதுல இவங்க வேற இருக்காங்களா!! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Summary:

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும்  எழுதி இயக்கும் திரைப்படம் ஃப்ரண்ட்ஷிப். இ

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும்  எழுதி இயக்கும் திரைப்படம் ஃப்ரண்ட்ஷிப். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹர்பஜன் சிங் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அப்பொழுதே அவர் தனது தமிழ் ட்வீட்டுகளால் ஏராளமான தமிழக ரசிகர்களைப் பெற்றார். ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா நடிக்கிறார்.

இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் அர்ஜுனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி புகழ் பாலாவும் நடிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரண்ட்ஷிப் படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தில் நடனமாடுவது போன்ற புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை ஹர்பஜன், தமிழனின் தாய் மடி கீழடி, தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னை மடி, எந்த சொல்லிலும் அடங்காது வேட்டி கட்டிய தருணம். இந்த சம்மர் நம்ம படம் பிரண்ட்ஷிப் வருது.  தளபதி தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம் என பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது. மேலும் அதில் காமெடி நடிகர் சதீஷ் மற்றும் பாலாவும் உள்ளனர்.


Advertisement