
Friends killed youngman in kadaloor
கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெய்வின் ஜோசப். இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜெய்வின் பெற்றோர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் ஜெய்வின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் ஜெய்வின் அவரது நண்பர்களான விஜய் மற்றும் ஞானசேகரன் ஆகியோரிடம் அதிகம் பேசியது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நெய்வேலி மற்றும் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து ஜெய்வின் ஜோசப்பின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவனது உடலை உப்பனாறு அருகே புதைத்ததாகவும் கூறியுள்ளனர் பின்னர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று ஜெய்வின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள மீதி 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement