சமூக இடைவெளியை பின்பற்றி வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு வாசிகள்..! வைரலாகும் வீடியோ.



Forgien people danced vaathi kamamiking song

கைதி, மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் தான் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலு‌ம் இப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகயிருந்தது ஆனால் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் திரைக்கு வராமல் தள்ளிபோயுள்ளது. 

Vaathi kamamiking

இந்நிலையில் அனிருத் இசையில் வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகிறது. தற்போது வெளிநாட்டு வாசிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ காட்சியை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.