தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை..! விஜய்யின் மாஸ்டர் படம் குறித்த ஆச்சரிய தகவல்.!

தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை..! விஜய்யின் மாஸ்டர் படம் குறித்த ஆச்சரிய தகவல்.!


first-metro-railway-set-in-tamil-movie-as-master

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் குட்டி ஸ்டோரி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

master

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் ஓன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கலை இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருக்கும் சதீஷ்குமார் என்பவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், மாஸ்டர் படத்திற்காக இதுவரை 15 செட்டுகள் போடப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று மெட்ரோ ரயில் நிலைய செட் என்றும் கூறினார்.

இதுவரை எந்த தமிழ் படத்திலும் மெட்ரா ரயில் நிலைய செட் அமைத்து படமாக்கப்பட்டதா நிலையில், மெட்ரோ ரயில் நிலையம் செட் போட்டு படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் மாஸ்டர் என்ற தகவல் கூறியுள்ளார் சதீஷ்குமார்.