இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவரா? கசிந்த தகவல்!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவரா? கசிந்த தகவல்!!


First Elimination in bigboss

விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு இரு வாரங்கள் அன்பு, பாசம், மோதல் என மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த பிக்பாஸ் சீசன் 5ல் நடிகர் நடிகைகள், நாட்டுப்புற கலைஞர், நாடக கலைஞர் மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

மேலும் இதனை ரசிகர்களும் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே திருநங்கையான நமிதா மாரிமுத்து ஒரு சில காரணங்களால் வீட்டிலிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் நடைபெற்றது. 

அதன் வகையில் தற்போது அபிநய், சுருதி, சின்னப்பொண்ணு, மற்றும் அபிஷேக் ஆகியோர் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்று இருப்பதாகவும், சின்னப்பொண்ணு அல்லது அபிஷேக் இருவரில் யாரேனும் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவர் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.