சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேனா? அதைவிட சூப்பர் வேலை இருக்கு! அதிரடியாக மறுப்பு தெரிவித்த பிரபலம்!

Summary:

fashion designer karun raman not participate in bigboss

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் இதுவரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் நான்காவது சீசன் ப்ரோமோ வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் அதில் நடிகைகள் சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதனை அவர்கள் மறுத்துவிட்டனர்.

அதனை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி, ரியோ, ஷாலு ஷம்மு, அமிர்தா ஐயர் ஆகியோரும் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பிரபல ஃபேஷன் நடனக் கலைஞர் மற்றும் ஒப்பனையாளர் கருன் ராமன் என்பவரும் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் அதற்கு கருன் ராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதை விட ஒரு நல்ல வேலை எனக்கு இருக்கிறது. எனவே வீண் வதந்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கருன் ராமன் தெரிவித்துள்ளார்.


Advertisement