சினிமா

ஒட்டுமொத்த இளைஞர்களை கவர்ந்த காமெடி ஜாம்பாவானுக்கு இன்று வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Summary:

Fans wishes to actor sandhanam

 

காமெடி நடிகர் சந்தானம் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

21.01.2020 இன்று பிறந்தநாள் கொண்டாடும் சந்தானத்திற்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் சினிமாவில் காலடி பதித்து பல பிரமாண்ட காமெடி படங்ளில் காமெடியனாக நடித்து தற்போது ஹீரோவாகவும் வந்து வெற்றி பெற்றவர் சந்தானம். 

ஆரம்பத்தில் காமெடியில் கலக்கி வந்த அவர் தற்போது ஹீரோவாகவும், காமெடி ஜம்போவனாகவும் ஒரே படத்தில் திகழ்கின்றார் நடிகர் சந்தானம். இந்நிலையில் ஹீரோ சந்தானம் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

காமெடி நடிகர் சந்தானத்தை உங்களுக்கும் பிடித்திருந்தால், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.


Advertisement