தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கடும் அதிர்ச்சி... அட்வான்ஸ் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.? அஜித்தின் ரீல் மகளுக்கா.? அதிர்ந்த ரசிகர்கள் !
சினிமாவில் பல பேர் குழந்தை நட்சத்திரமாக இருந்து மிகப்பெரிய ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த மீனாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான். தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தவர்.
அந்த வரிசையில் தற்போது முன்னணி கதாநாயகியாக உருவாகி கொண்டு இருப்பவர் அனிகா சுரேந்திரன். தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்ற இவர் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.
என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற இவர் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் அஜித் ஜோடியின் மகளாக நடித்திருப்பார். தற்போது இவரையே குட்டி நயன்தாரா என அழைக்கும் அளவிற்கு இளம் கதாநாயகியாக உருவாகி வருகிறார்.
இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் திடீரென இவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. அந்தப் போஸ்டரில் அட்வான்ஸ் ஆக இவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது இது தொடர்பாக செய்திகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இவர் கலந்து கொள்ள இருக்கும் ஒரு புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அந்த திரைப்படத்தில் இவர் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.