தளபதி ரசிகர்களின் பக்கா பிளான்!! மாஸ்டர் படக்குழுவிற்கு விடுத்த வேற லெவல் கோரிக்கை! நடக்குமா?fans-request-to-master-movie-team

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு, மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், கொரோனா  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட  நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

    master

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் தமிழை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடித்ததில்லை. ஆனாலும் அவர் படம்  வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்படும் நிலையில் அவருக்கு தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவிலும் நடிகர் விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்த வேண்டுமென எண்ணிய அவரது ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதற்காக #MasterHindi என்றும் டிரெண்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.