சினிமா

தமிழ் திரை உலகை கலக்க காத்திருக்கும் நடிகர் நடிகைகளின் வாரிசுகள் யார் யார்? ஒரு கலக்கல் சர்வே!

Summary:

Famous tamil celebrities son and daughters who gonna lead tamil cinema

இன்று தமிழ் சினிமாவை ஆளும் பலரும் சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் ஆகும். அந்த வகையில் தற்போதுள்ள பிரபலங்களின் வாரிசுகள் யார் யார்? இவர்களில் யாரெல்லாம் வருங்கால தமிழ் சினிமாவை ஆளப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவின் இளையதளபதி நடிகர் விஜய். இவர் பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் ஆவர். தந்தையின் இயக்கத்தில் அவரது செல்வாக்கை வைத்து தமிழ் சினிமாவிற்குள் வந்த வந்த விஜய் இன்று தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அந்த வகையில் இவருக்கு ஜேசன் சஞ்சை என்ற மகனும் மற்றும் தியா ஷாஷா என ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரில் யார் சினிமாவிற்குள் வரப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

சூர்யா ஜோதிகா:
தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பமான சிவகுமார் குடும்பத்தின் வாரிசுகள்தான் தேவ் மற்றும் மகள் தியா. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. நட்சத்திர தம்பதியான இவர்களின் பிள்ளைகளில் யார் சினிமாவிற்குள் வரப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

பிரசன்னா ஸ்னேகா:

நட்சத்திர தம்பதிகளாக பிரசன்னா மற்றும் சினேகாவின் மகன்தான் விஹான். நட்சத்திர தம்பதிகளாக இவர்கள் தங்களது மகனை சினிமாவில் அறிமுகம் செய்கிறார்களா இல்லையா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நடிகை மீனா:
தெறி படத்தில் விஜய் மகளாக நடித்தவர் பேபி நைனிகா. இவர் பிரபல தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான மீனாவின் மக்கள் ஆவர். ஏற்கனவே சினிமாவிற்குள் அறிமுகமான நைனிகா வருங்காலத்தில் மாபெரும் நடிகையாக வருவது உறுதியாகிவிட்டது.

விக்ரம்:

துருவ் விக்ரம். பிரபல தமிழ் சினிமா நடிகரான விக்ரமின் மகன்தான் துருவ். ஏற்கனவே பிரபல இயக்குனரின் இயக்கத்தில் இவர் நடிக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜித் ஷாலினி:

அனைவராலும் செல்லமாக தல என அழைக்கப்படும் தல அஜித் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் மாபெரும் இடத்தை பிடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவரது மகள்தான் அனோஷ்கா. தனது மகளை சினிமா துறையில் அஜித் அறிமுகம் செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவகார்த்திகேயன்:

ஏற்கனவே கனா திரைப்படம் மூலம் தனது மக்கள் அனோஷ்கா வை தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகம் செய்துவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். வருங்காலத்தில் இவர் பாடகராக வருகிறாரா அல்லது நடிகையாக வருகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement