சினிமா

68 வயது நடிகருடன் இளம் பாடகி திருமணம்! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல பாடகி!

Summary:

famous singer marriage to old age actor

உலக அளவில் புகழ்ப்பெற்ற பாப் பாடகியான செலீனா கோம்ஸ், தன்னை விட 42 வயது அதிகமான நடிகரை திருமணம் செய்ய இருக்கிறார்.

பாப் பாடல் உலகில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர் செலீனா கோம்ஸ். இவர் பல பாடகர்களை காதலித்து வருவதாக வதந்திகள் வந்தது. ஏன், பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங்-டுகெதரில் இவர் இருந்ததாக கூட செய்திகள் வந்தது.

இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் பில் முர்ரே என்பவரை செலீனா காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

செலீனாவுக்கு வயது 26. நடிகர் முர்ரேவுக்கு வயது 68. அதாவது செலீனாவை விட 42 வயது அதிகம் உடையவர். கிட்டத்தட்ட அவருக்கு தாத்தா வயதுடையவர் என்பது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement