"96" விஜய் சேதுபதி மற்றும் "ராட்சசன்" ராம் குமார் ஆகிய படத்தை பாராட்டிய இயக்குனர் சங்கர்...!

"96" விஜய் சேதுபதி மற்றும் "ராட்சசன்" ராம் குமார் ஆகிய படத்தை பாராட்டிய இயக்குனர் சங்கர்...!


famous-director-in-vijay-sethupathi

"96" விஜய் சேதுபதி மற்றும் "ராட்சசன்" ராம் குமார் ஆகிய படத்தை பாராட்டிய இயக்குனர் சங்கர்...! 

விஜய் சேதுபதியின் ‘96’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ ஆகிய 2 படங்கள் சமீபத்தில் வெளியானது. இதில் ‘96’ படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.  இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் ‘ராட்சசன்’ படத்தை ராம்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவ்விரு படங்களுமே ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த 2 படங்களையும் பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி ஸ்டேட்டஸ் ட்விட் செய்துள்ளார். 
 

 

 

96..mostly r somewhere u r getting connected personally. Dat’s d beauty of dis movie.Superb performnce by Vijaysedupathy. It’s a delight to watch Trisha.Hats off to dir. Premkumar.Ratchasan-Another interesting movie.Happy to c audience clapping for dir. Ramkumar card.He deserves

— Shankar Shanmugham (@shankarshanmugh) October 14, 2018