"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
இந்த படத்தில் நடிகர் ஜெய்யுடன் களமிறங்கும் பிரபல பிக் பாஸ் நாயகன்! யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் உள்ள பிரபல திரைப்பட இயக்குனர்களில் இயக்குனர் கோபி நயினாரும் ஒருவர் ஆவார். இவர் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் இவர் அறம் என்னும் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் அவருக்கு ஒரு மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் உருவான அந்த அறம் என்னும் படத்தில் நடிகை நயன்தார அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் நடிகை நயன்தாராவை முதன்மை நாயகியாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும்.
மேலும் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலிலும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பையும் பெயரை எடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீண்டும் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நடிகர் ஜெய் அவர்கள் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் டேனியலும் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை பிக் பாஸ் புகழ் டேனியல் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.