ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
அடேங்கப்பா... பிரபல தொகுப்பாளினி மணிமேகலை சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா...
ஆரம்பத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் மற்றும் சிரிப்பால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து, காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதிக்காத நிலையில் அவர்களை எதிர்த்து இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார் மணிமேகலை. இந்நிகழ்ச்சியில் இவரின் குழந்தை தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலையின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது யூடியூப், பட்டிமன்றம், குக் வித் கோமாளி என நிறைய விஷயங்களில் பணியாற்றி வரும் மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் $1 Million - $5 Million வரை என கூறப்படுகிறது.