சினிமா

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை..! வெளியான அதிர்ச்சி காரணம்..!

Summary:

Famous actress vani sree son commit suicide

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் வாணிஸ்ரீ. தமிழில் வசந்த மாளிகை, வாணி ராணி, கண்ணன் என் காதலன், உயர்ந்த மனிதன் என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இவர் நூற்றுக்கு மேற்பட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை செங்கல்பட்டுக்கு அருகே உள்ள ஆனூர் என்னும் பகுதியில் உள்ள பழைய காலத்து பங்களா ஒன்றை வாங்கி அதில் தங்கியிருந்த நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் (36) மன அழுத்தம் காரணமாக வீட்டுல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அபிநய வெங்கடேஷ் பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிவந்தது குறிப்பிடத்தக்கது. வெங்கடேஷின் தற்கொலையை அடுத்து திருக்கழுக்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement