தமிழகம் சினிமா

பாலியல் வலி என்றல் அது எனக்கு நல்ல தெரியும்!. கண்ணீருடன் பிரபல நடிகை!.

Summary:

பாலியல் வலி என்றல் அது எனக்கு நல்ல தெரியும்!. கண்ணீருடன் பிரபல நடிகை!.


சென்னை அயனாவரம் பகுதியில் 15 வயது சிறுமி 17 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த காவலாளிகள், லிப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்று நாடுமுழுவதும் மக்கள் கொந்தளித்தனர்.

இந்நிலையில், அந்த சிறுமிக்கு ஆதரவு வேண்டி ஆர்ப்பாட்டத்தில், நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நடிகை சாக்ஷி அகர்வால், டாக்டர் கமலா செல்வராஜ், திருநங்கை அப்சரா ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கணேஷ் வெங்கட்ராமன் மனைவி, நிஷா வெங்கட்ராமன் அழுகையுடன் பேசியுள்ளார். எனக்கும் இது போன்ற கொடுமை நிகழ்ந்துள்ளது. அந்தக் குழந்தையின் வலி என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

எனக்கு அந்தக் கொடுமை நடந்தபோது 10 வயது. அந்த வயதில் என் அம்மாவிடம் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் தோழிகளிடம் மட்டுமே கூறினேன். அந்தக் குழந்தைச் சந்தித்து, என் ஆறுதலைத் தெரிவிக்க வேண்டும் என்று உருக்கத்துடன் பேசியுள்ளார்.


Advertisement