சினிமா விளையாட்டு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்திய இந்திய நடிகை.! அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா.?

Summary:


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நடிகை அர்ஷிகான், ஆப்கானிஸ்தான் பிரச்சனை கா


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நடிகை அர்ஷிகான், ஆப்கானிஸ்தான் பிரச்சனை காரணமாக தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.

இந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அர்ஷிகான். இவர் தமிழில் மல்லி மிஷ்து என்ற படத்திலும் இந்தியில் வெப்தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பல வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். பல இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். 

இந்தநிலையில் அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து விரைவில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார். 

இதுகுறித்து அர்ஷிகான் கூறுகையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம். எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். எனது பெற்றோர் எனக்கு இந்திய மாப்பிள்ளையை பார்ப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


Advertisement